Images
  • Penthouse
    படம்: Wallich Residence website

சிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்

பிரிட்டனைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் ஜேம்ஸ் டைசன்((James Dyson)) குப்பை சேகரிக்கும் பையைப் பயன்படுத்தாத 'vacuum cleaner' எனும் துப்புரவுக் கருவியை வடிவமைத்த பெருமைக்குரியவர்.

அவர் சிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த, 'pent house' எனப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் அமைந்திருக்கும் சொகுசு வீட்டை வாங்கியிருப்பதாய் அதிகாரபூர்வத் தகவல்கள் கூறுகின்றன.

மூன்று மாடி கொண்ட அந்த சொகுசு வீட்டுக்கு Wallich Residence என்று பெயரிடப்பட்டுள்ளாது.

சிங்கப்பூரின் முக்கிய நிதி வட்டாரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆக உயரமான கட்டடமான Guoco Towerஇன் 62ஆம் தளம் முதல் 64ஆம் தளம் வரை அமைந்துள்ளது அந்த சொகுசு வீடு.

2017ஆம் ஆண்டு விற்பனைக்கு விடப்பட்டபோது 100 மில்லியன் வெள்ளி வரை அந்த வீடு ஏலத்தில் கேட்கப்பட்டது.

ஆனால் திரு. டைசன் அதனை 73.8 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியதாய் Business Timesஇல் தகவல் வெளியாகியிருக்கிறது.

சென்ற மாதம் 20ஆம் தேதி டைசன் தம்பதி அந்த வீட்டில் குடியேறியதாய் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

சிங்கப்பூர் அரசாங்கம் சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளைச் சென்ற ஆண்டு அமல்படுத்தியதன் பிறகு, இங்கு வீடு வாங்கும் வெளிநாட்டினர் 20 விழுக்காட்டுக்கும் அதிகமான வரி செலுத்தவேண்டும்.

72 வயது பெருஞ்செல்வந்தரான திரு.டைசன், இந்த வட்டாரத்தில் தமது நிறுவனத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு நிறுவனத் தலைமையகத்தைச் சிங்கப்பூருக்கு மாற்றிக்கொண்டதால், இங்கு வீடு வாங்கியிருப்பதாய் அவரது பேச்சாளர் கூறினார். 

Top