Images
  • handcuff
    (படம்: Jeremy Long) 

திறந்திருந்த சன்னலின்வழியாகக் கதவைத் திறந்து வீட்டுக்குள் புகுந்ததாகச் சந்தேகிக்கப்படும் 18 வயது இளையர் கைது

திறந்திருந்த சன்னலின்வழியாகக் கதவைத் திறந்து, அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த சந்தேகத்தின்பேரில், 18 வயது இளையரைக் கைதுசெய்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை மணி 4.40 அளவில், பியோ கிரசண்டில் அந்தச் சம்பவம் நடந்ததாகக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

வெளியே நின்ற ஆடவர், திறந்திருந்த சன்னலின்வழியே கையைவிட்டு, பூட்டப்பட்டிருந்த கதவை உள்புறமாகத் திறந்து உள்ளே நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால், வீட்டில் இருந்த பொருள்கள் எதுவும் திருடுபோகவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

விசாரணையின்வழி ஆடவர் அடையாளம் காணப்பட்டு அன்றே கைதுசெய்யப்பட்டார்.

வீட்டு உரிமையாளர்கள், சன்னல்களில் தரமான தடுப்புக் கம்பிகளைப் பொருத்துமாறும், சற்று நேரமே வீட்டைவிட்டுச் சென்றாலும் கதவுகளையும் சன்னல்களையும் மூடிச் செல்லுமாறும், காவல்துறை பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியது.

வீட்டில், அதிகமான ரொக்கத்தையும் விலைமதிப்புள்ள பொருள்களையும் வைத்திருக்கவேண்டாம்.

இயன்றவரை திருடர்கள் புகுந்தால் எச்சரிக்கும் சாதனங்கள், கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி அவை தொடர்ந்து சரிவர இயங்குவதை உறுதி செய்யவும்.
 

Top