Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவை விழுங்கும் பிரச்சினை உள்ளோருக்கு ஏற்ற உணவு வகைகள் - பயிற்சி பெற்ற உணவங்காடிக்காரர்கள்

உணவை விழுங்கும் பிரச்சினை உள்ளோருக்கு ஏற்ற உணவு வகைகளை வழங்க அலெக்சாண்டிரா (Alexandra) மருத்துவமனை ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

உணவை விழுங்கும் பிரச்சினை உள்ளோருக்கு ஏற்ற உணவு வகைகளை வழங்க அலெக்சாண்டிரா (Alexandra) மருத்துவமனை ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

'Smaller Bites to Swallow Right' அதாவது 'உணவை நன்றாக மென்று விழுங்கவும்' என்ற இயக்கத்தில் 17 உணவுக் கடைக்காரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மூத்தோரில் 15 விழுக்காட்டினருக்கு உணவை விழுங்கும்போது ஏற்படக்கூடிய Dysphagia எனும் பிரச்சினை இருக்கிறது.

மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளில் உணவை விழுங்கும் பிரச்சினை குறித்த சோதனைகளுக்காக அனுப்பப்படுவோரில் 75 விழுக்காட்டினர் 60 வயதுக்கு மேற்பட்டோர்.

இந்நிலையில், உணவை விழுங்கச் சிரமப்படுவோருக்கு பொருத்தமான உணவைத் தயாரித்து வழங்க உணவுக் கடைக்காரர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

உணவங்காடிக்காரர்களும் இயக்கத்தை வரவேற்றுள்ளனர்.


தற்போது அலெக்சாண்டிரா உணவு நிலையம், ABC Brickworks உணவு நிலையம் ஆகியவற்றிலுள்ள சில கடைகள் இயக்கத்தில் பங்கெடுத்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்