Images
  • state courts
    கோப்புப் படம்: TODAY

பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரியுடன் சண்டையிட்ட கடைக்காரருக்கு அபராதம்

பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரியுடன் சண்டையில் ஈடுபட்ட கடைக்காரர் ஒருவருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் யீஷுன் சென்ட்ரல் 1-இல் உள்ள Little Pets Kingdom கடையில் நடந்தது.

செல்லப்பிராணிகள் விற்கும் அந்தக் கடையின் மேலாளரான 48 வயது ஆடவர், கடையில் முகக்கவசம் அணியாமல் இருந்தார்.

அவரை முகக்கவசம் அணியச் சொன்ன அதிகாரிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றி கைகலப்புக்கு இட்டுச் சென்றது.

தரையில் உருண்டு ஒருவரை ஒருவர் குத்திக்கொண்ட அவர்களை பக்கத்துக் கடையில் இருந்த ஆடவர் விலக்கினார்.

இருவரும் ஒருவரை ஒருவர் காயப்படுத்தினர்.

கடை மேலாளர் நீதிமன்றத்தில் இன்று தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தகாத வார்த்தைகளால் அதிகாரியைத் திட்டிய மற்றொரு குற்றச்சாட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு அமலாக்க அதிகாரி மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீதான வழக்கு இம்மாதம் 29ஆம் தேதி விசாரணைக்கு வரும்.  

Top