Images
  • wedding hall
    படம்: நித்திஷ் செந்தூர் 

பி.ஜி.பி திருமண மண்டபத்தைக் கட்டியது யார்?

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் இந்தியத் திருமண மண்டபங்களில் பி.ஜி.பி திருமண மண்டபமும் ஒன்று.

திரு. பி.கோவிந்தசாமி பிள்ளையின் நினைவாக அதற்கு பி.ஜி.பி திருமண மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டது.

1960களில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக அவர் கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கினார்.

அங்கு திருமண மண்டபம் கட்டுவதற்கும் அந்த நன்கொடை உதவியது.

1965ஆம் ஆண்டு, ஜூன் 19ஆம் தேதி, சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசுஃப் இஷாக் அந்த மண்டபத்தை அதிகாரபூர்வாகத் திறந்துவைத்தார்.

2014ஆம் ஆண்டு திருமண மண்டபம் 8 மில்லியன் வெள்ளி செலவில் மறுசீரமைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் அதிபர் S R நாதன் அதனைத் திறந்துவைத்தார்.

3 தளங்களைக் கொண்ட பி.ஜி.பி அரங்கம் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஒலி, ஒளி அம்சங்களால் அரங்கம் புதுப் பொலிவு பெற்றுள்ளது.

மூலம்: pgphall.sspt.org.sg இணையத்தளம், தேசிய நூலக வாரியம்


Top