Images
  • Merdeka
    (படம்: Xabryna Kek/ CNA)

அதிரடித்திட்டம் முடிவடைந்த பின்னரும் மூத்தோர் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்: சுகாதார அமைச்சு

கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித்திட்டம் முடிவடைந்த பின்னரும், மூத்தோர் மேம்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடரவேண்டுமென சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அதிரடித்திட்டம் ஜூன் முதல் தேதி முடிவுக்கு வரவுள்ளது. அதன் பிறகு கட்டுப்பாடுகள், மூன்று கட்டங்களாகத் தளர்த்தப்படும்.

அப்போது, பல நடவடிக்கைகள் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கப்படும்.

நடவடிக்கைகள் அதிகரிப்பதால், சமூக அளவிலான கிருமித்தொற்று அபாயமும் அதிகரிக்கும். ஆகவே, மூத்தோர் முடிந்த அளவுக்கு வீட்டிலேயே இருக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம், மூன்றாம் கட்டங்களில் என்னென்ன நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது பிறகு அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

Top