Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தளர்த்தப்படும் அதிரடித் திட்டத்தின் 2ஆம் கட்டம் ஜூன் இறுதிக்கு முன்னரே தொடங்கக்கூடும்: அமைச்சர் வோங்

சிங்கப்பூரில் படிப்படியாகத் தளர்த்தப்படும் அதிரடித் திட்டத்தின் 2ஆம் கட்டம் ஜூன் இறுதிக்கு முன்னரே தொடங்க வாய்ப்பிருப்பதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்(Lawrence Wong) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
தளர்த்தப்படும் அதிரடித் திட்டத்தின் 2ஆம் கட்டம் ஜூன் இறுதிக்கு முன்னரே தொடங்கக்கூடும்: அமைச்சர் வோங்

படம்: TODAY/Kenneth Cheng

சிங்கப்பூரில் படிப்படியாகத் தளர்த்தப்படும் அதிரடித் திட்டத்தின் 2ஆம் கட்டம் ஜூன் இறுதிக்கு முன்னரே தொடங்க வாய்ப்பிருப்பதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்(Lawrence Wong) தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பதிவாகும் சமூகக் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டாம் கட்டத்துக்குச் செல்வது எப்போது என்பது தீர்மானிக்கப்படும் என்று திரு. வோங் கூறினார்.

கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகவும் நிலையாகவும் இருந்தால் ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் இரண்டாம் கட்டத்திற்குச் செல்வது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று திரு. வோங் தெரிவித்தார்.

இம்மாதம் 19ஆம் தேதி, அரசாங்கம் அதிரடித் திட்டம் 3 கட்டங்களாகத் தளர்த்தப்படும் என்று அறிவித்தது. முதல் கட்டம் அடுத்த மாதம் 2ஆம் தேதி தொடங்குகிறது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்