Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இலவச விமானச் சீட்டுகளைக் கொடுப்பதாகக் கூறும் போலிப் இணையப்பக்கம் குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை

இலவச விமானச் சீட்டுகளைக் கொடுப்பதாகக் கூறும் ஒரு போலிப் இணையப் பக்கம் குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
இலவச விமானச் சீட்டுகளைக் கொடுப்பதாகக் கூறும் போலிப் இணையப்பக்கம் குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை

(படம்: Facebook/Xiaoling Yang)

இலவச விமானச் சீட்டுகளைக் கொடுப்பதாகக் கூறும் ஒரு போலிப் இணையப் பக்கம் குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் போலி இணையப் பக்கம் பயனீட்டாளர்களின் சொந்தத் தகவல்களைப் பதிவுசெய்யுமாறு கேட்பதாக நிறுவனம் அதன் Facebook பக்கத்தில் குறிப்பிட்டது.

போலி இணையப் பக்கத்தை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியும் சொந்தத் தகவல்களை அதிகாரபூர்வமற்ற இடங்களில் வெளியிட வேண்டாம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

அத்தகைய போலி இணையப் பக்கங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் குறிந்து ஐயங்கள் இருந்தால் http://singaporeair.com/en_UK/feedback-enquiry/எனும் இணையப்பக்கம் வாயிலாகவோ சமூக ஊடகங்கள் வழியாகவோ பொதுமக்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸைத் தொடர்புகொள்ளலாம்.

இதற்குமுன் 2017இல் 70ஆம் ஆண்டு நிறைவையொட்டி இலவச விமானச் சீட்டுகளைக் கொடுப்பதாகப் போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்