Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'COVID-19 கிருமிப் பரவலுக்கிடையே பொதுச் சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்கள் மிக அவசியம்'

PHPC எனப்படும் பொதுச் சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்கள் COVID-19 கிருமிப் பரவலுக்கிடையே மிகவும் அவசியமாகக் கருதப்படுவதாக அதிபர் ஹலிமா யாகோப் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
'COVID-19 கிருமிப் பரவலுக்கிடையே பொதுச் சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்கள் மிக அவசியம்'

(படம்: Halimah Yacob/ Facebook)

PHPC எனப்படும் பொதுச் சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்கள் COVID-19 கிருமிப் பரவலுக்கிடையே மிகவும் அவசியமாகக் கருதப்படுவதாக அதிபர் ஹலிமா யாகோப் கூறியிருக்கிறார்.

மருத்துவமனை ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க அவை உதவுவதை அவர் சுட்டினார்.

சிங்கப்பூரில் அத்தகைய சுமார் 900 மருந்தகங்கள் செயல்படுகின்றன.

காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை அவை கையாள்கின்றன.

ஆங் மோ கியோவில் செயல்படும் PHPC மருந்தகத்துக்குத் திருவாட்டி ஹலிமா சென்றிருந்தார்.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களை அவர் சந்தித்துப் பேசினார்.

COVID-19 கிருமிப்பரவலின்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அதிபர் பார்வையிட்டார்.

பயண விவரங்கள், சுகாதார விவரங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான படிவங்களை நிர்வகித்தல், ஊழியர்கள் பொருத்தமான பாதுகாப்பு அங்கிகளை அணிதல் போன்றவை மருந்தகங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் சில. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்