Images
  • Physio
    படம்: Pixabay 

Physiotherapy துறைக்குத் தகுதிபெற மூன்று ஆண்டுகள் போதும்

Physiotherapy எனப்படும் பயிற்சிவழிச் சிகிச்சைத் துறைக்கு மாற விரும்புவோர் அதற்கான தகுதியை நான்காண்டுகளுக்குப் பதிலாக மூன்றே ஆண்டுகளுக்குள் பெறமுடியும்.

அறிவியல் தொடர்பான பட்டத்தைப் பெற்றிருந்தால் அது சாத்தியம்.

தகுதிக்கான காலவரம்பைக் குறைப்பது தொடர்பிலான புதிய திட்டம் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரர்கள் வேலை மாறும்போது புதிய வேலைகளுக்கேற்ற திறன்களைக் கற்றுக்கொள்ள திட்டம் உதவுகிறது.

திட்டத்தின் பயிற்சிவழிச் சிகிச்சையாளர்களுக்கான விரைவுத் தகுதி நடைமுறை இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் காணும்.

சுகாதாரப் பராமரிப்புத் துறை தொடர்ந்து வளர்ச்சிகாணும் துறை. அதிகரிக்கும் தேவைக்கேற்ப இன்னும் அதிகமானோர் அந்தத் துறைக்குத் தேவைப்படுவதாக சுகாதாரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர் கூறினார்.

விரைவுத் தகுதிமுறை மூலம் மேலும் அதிகமானோர் இந்தத் துறைக்கு ஈர்க்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.


Top