Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீவு விரைவுச்சாலை விபத்து - மாண்ட நபர் பங்களாதேஷைச் சேர்ந்தவர்

நேற்று முன்தினம் (ஏப்ரல் 20) தீவு விரைவுச்சாலையில் நேர்ந்த விபத்தில் மாண்ட வெளிநாட்டு ஊழியர், பங்களாதேஷைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

நேற்று முன்தினம் (ஏப்ரல் 20) தீவு விரைவுச்சாலையில் நேர்ந்த விபத்தில் மாண்ட வெளிநாட்டு ஊழியர், பங்களாதேஷைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 வயது டோஃபஸல் ஹொசைனுக்கு (Tofazzal Hossain) மனைவியும் 2 வயது மகனும் இருக்கிறார்கள்.

அவர் 2009ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார்.

அவருடைய குடும்பத்தினர், அவரின் சம்பளத்தைச் சார்ந்திருந்தனர்.

டோஃபஸலின் மரணம் குறித்து தங்கள் தாயாருக்கு இன்னும் தெரியாது என்று அவரது சகோதரர் அப்துல் ஹஸீஸ் TODAY-யிடம் கூறினார்.

தாயாருக்கு அண்மையில் தான் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் டோஃபஸல்லின் மரணம் குறித்துத் தெரிந்தால், அவரால் தாங்க முடியாது என்றும் திரு. அப்துல் சொன்னார்.

2018ஆம் ஆண்டில், டோஃபஸல் கடைசியாகப் பங்களாதேஷ் சென்றிருந்தார். அப்போது தான், அவருக்குத் திருமணமானது.

டோஃபஸல் நல்லவர் என்றும் கனிவான உள்ளம் கொண்டவர் என்றும் அவருடைய தந்தை தெரிவித்தார்.

அவருடைய சடலம் நாளை பங்களாதேஷுக்கு அனுப்பப்படும் என்றார் திரு. அப்துல்.

சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நேர்ந்த விபத்தில், மேலும் 16 பேர் காயமுற்றனர்.

7 பேர் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர்.

அவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் தனது Facebook பக்கத்தில் நேற்று குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்