Images
விஸ்தாரா விமானிகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் பயிற்சி
இந்திய விமான நிறுவனமான விஸ்தாரா (Vistara) சுமார் 20 விமானிகளுக்குப் பயிற்சி வழங்கவுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அந்தப் பயிற்சி விஸ்தாரா விமானிகளுக்கு அளிக்கப்படும். அவர்கள் சுமார் ஓராண்டு காலத்திற்குப் பயிற்சிபெறுவர்.
Boeing 787 ரக விமானம் சேவைக்கு வரும் முன்னர், அந்தப் பயிற்சி அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
ஜனவரியிலிருந்து 12 விஸ்தாரா விமானிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடமிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஸ்கூட் நிறுவனம் விஸ்தாரா விமானிகளுக்குச் செயல்முறை அனுபவப் பயிற்சியை வழங்கும்.

