Images
  • AMK Fire
    (படம்: Pixabay)

அங் மோ கியோ வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ

அங் மோ கியோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் இன்று தீப் பற்றிக்கொண்டது.

அந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

எவரும் அப்புறப்படுத்தப்படவில்லை.

ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டுக்குள் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள் வல்லந்தமாய் நுழைந்து வாளிகளில் தண்ணீரைப் பிடித்து ஊற்றித் தீயை அணைத்தனர்.

வீட்டின் முன்னறையில் தீப்பற்றியது.

தீப் பற்றியதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
 

Top