Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்னிலக்கச் சேவைகளில் ஏற்பட்ட தடங்கலுக்கு DBS வங்கி மன்னிப்பு

DBS வங்கி கடந்த வாரம் அதன் மின்னிலக்கச் சேவைகளில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மின்னிலக்கச் சேவைகளில் ஏற்பட்ட தடங்கலுக்கு DBS வங்கி மன்னிப்பு

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

DBS வங்கி கடந்த வாரம் அதன் மின்னிலக்கச் சேவைகளில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து வங்கியின் நடைமுறைகள் மறுஆய்வு செய்யப்படுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் குப்தா (Piyush Gupta) கூறினார்.

கணினி நினைவகத்தில் ஏற்பட்ட குறைபாடே தடங்கலுக்குக் காரணம் என்றார் அவர்.

அதன் காரணமாக வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குகளை இரண்டு நாள் பயன்படுத்த இயலவில்லை.

சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட திரு. குப்தா,
மேலும் சிறந்த சேவையை எதிர்பார்க்க வாடிக்கையாளர்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறினார்.

சேவை வழங்குநர் என்ற முறையில் வங்கி அதன் மீள்திறனையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று திரு. குப்தா குறிப்பிட்டார்.

அதனை முன்னிட்டு நடைமுறைகள் முழு அளவில் மறுஆய்வு செய்யப்பட்டு என்னென்ன மேம்பாடுகள் தேவை என்பது கண்டறியப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்