Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்றுக்கு ஆளானோர் சென்று திரும்பிய இடங்கள்

கிருமித்தொற்றுக்கு ஆளானோர் Canberra Plaza கடைத்தொகுதி, பீஷான் வட்டாரம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் உணவகங்களுக்குச் சென்றதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்றுக்கு ஆளானோர் சென்று திரும்பிய இடங்கள்

(படம்: Google Street View)

கிருமித்தொற்றுக்கு ஆளானோர் Canberra Plaza கடைத்தொகுதி, பீஷான் வட்டாரம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் உணவகங்களுக்குச் சென்றதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்ற இடங்கள்:

  • பீஷானில் உள்ள Mata Thai உணவகம்
  • ஜூரோங்கில் உள்ள Vision Exchange கட்டடத்தில் இருக்கும் The Original Chickata eatery உணவகம்
  • டெக் வாய் லேனில் (Teck Whye) உள்ள Sheng Siong பேரங்காடி
  • Canberra Plaza கடைத்தொகுதியில் உள்ள Ya Kun Kaya Toast உணவகம்

அவர்கள் இம்மாதம் 9-ஆம் தேதிக்கும் 13-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்தவர்கள் இரண்டு வாரங்களுக்குத் தங்கள் உடல்நிலையை அணுக்கமாய்க் கவனிக்குமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தும்மல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டாலோ, வாசனையை அறிய முடியாமல் போனாலோ உணவின் சுவையை உணரமுடியாமல் போனாலோ உடனடியாக மருத்துவரை நாடுமாறு அமைச்சு வலியுறுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்