Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Hillion, Causeway Point கடைத்தொகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 நோயாளிகள் சென்றிருந்தனர்

COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர், புக்கிட் பாஞ்சாங் ஒருகிணைந்த போக்குவரத்து நடுவம், Hillion கடைத்தொகுதி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றது தெரியவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
Hillion, Causeway Point கடைத்தொகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 நோயாளிகள் சென்றிருந்தனர்

(படம்: Google Maps)

COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர், புக்கிட் பாஞ்சாங் ஒருகிணைந்த போக்குவரத்து நடுவம், Hillion கடைத்தொகுதி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றது தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்ட பட்டியலில் Hillion கடைத்தொகுதியில் குறிப்பிட்ட சில இடங்கள் இடம்பெற்றிருந்தன.

அவை....

  • My Briyani House உணவுக்கடை
  • McDonald’s விரைவு உணவகம்
  • Watsons கடை
  • NTUC FairPrice பேரங்காடி

புக்கிட் பாஞ்சாங் ஒருகிணைந்த போக்குவரத்து நடுவத்தில் உள்ள Mr Teh Tarik உணவகமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நடுவத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட 8 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

அந்தக் குழுமத்தைத் தவிர்த்து மற்ற இடங்களும் அமைச்சின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அவை...

  • உட்லண்ட்ஸில் அமைந்துள்ள Causeway Point கடைத்தொகுதி
  • ஜாலான் சுல்தானில் உள்ள Al-Sahira உணவகம்
  • தெம்பனிஸ் ஸ்டிரீட் 44இல் அமைந்துள்ள myCK கடை

அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தோருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்றுதிரும்பியோர் முன்னெச்சரிக்கையாக 14 நாளுக்குத் தங்கள் உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணிக்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோர் சென்றுவந்த இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சு கூறியது.

அந்த இடங்களில் துப்புரவு, கிருமிநீக்கப் பணிகளை மேற்கொள்ள நிர்வாகங்களுக்கு தேசியச் சுற்றுப்புற அமைப்பு உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்