Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் மேரா வியூ சந்தை, Takashimaya-விலுள்ள ரொட்டிக் கடை ஆகியவற்றுக்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வந்துள்ளனர்

புக்கிட்  மேரா வியூ சந்தை, ஆர்ச்சர்ட் ரோட் Takashimaya கடைத்தொகுதியிலுள்ள ரொட்டிக் கடை ஆகியவை, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -

புக்கிட் மேரா வியூ சந்தை, ஆர்ச்சர்ட் ரோட் Takashimaya கடைத்தொகுதியிலுள்ள ரொட்டிக் கடை ஆகியவை, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.


சுகாதார அமைச்சு வெளியிட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இடங்கள்:

  • Takashimaya-விலுள்ள St Leaven bakery ரொட்டிக் கடை

(மே 27-31 தேதிகளில் காலை மணி 6.45 முதல் மாலை 5 மணி வரை)
(ஜூன் 3-6 தேதிகளில் காலை மணி 6.45 முதல் மாலை 5 மணி வரை)

St Leaven கடையில் வேலை செய்யும் 40 வயது ஊழியருக்கு, ஜூன் 9ஆம் தேதி கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

  • Woodlands Galaxy சமூக மன்றம்

(மே 31 மாலை மணி 6.35 முதல் 7.20 வரை)

  • 115 புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையம்

(ஜூன் 6-9 தேதிகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை)

இங்குள்ள சில்லறைக் கடையில் வேலை செய்யும் 74 வயது சிங்கப்பூர் ஆடவர், கிருமித்தொற்று உறுதியானவர்களோடு தொடர்பில்லாத ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றுவந்தோர், 14 நாள்களுக்கு உடல்நலத்தை அணுக்கமாகக் கவனிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று உறுதியானோர் சென்றுவந்த இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை.

அங்கு, சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்