Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Warren Golf and Country Club, HomeTeamNS பொழுதுபோக்கு வசதி உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 நோயாளிகள் சென்றிருந்தனர்

நோய்ப் பரவலுக்கு ஆளானோர் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் இரண்டு பொழுதுபோக்குத் தலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
Warren Golf and Country Club, HomeTeamNS பொழுதுபோக்கு வசதி உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 நோயாளிகள் சென்றிருந்தனர்

(படம்: Facebook/HomeTeamNS Khatib, Warren Golf and Country Club)

நோய்ப் பரவலுக்கு ஆளானோர் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் இரண்டு பொழுதுபோக்குத் தலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்று, சுவா சு காங்கில் உள்ள Warren Golf and Country Club. மற்றொன்று காத்திப்பில் உள்ள HomeTeamNS பொழுதுபோக்கு வசதி.

நோய்வாய்ப்பட்டவர்கள் சென்றுவந்த இடங்களில் மேலும் சில இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

அவை...

  • 375 புக்கிட் பாத்தோக் ஸ்டிரீட் 31இல் உள்ள Is Salon.
  • சொங் பாங் ஈரச் சந்தை, உணவங்காடி நிலையம்
  • யீஷூனில் உள்ள Northpoint கடைத்தொகுதி

குறிப்பிட்ட அந்த இடங்களுக்குச் சென்ற பொதுமக்கள், அடுத்த 14 நாள்களுக்குத் தங்கள் உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணிக்கும்படி சுகாதார அமைச்சு அறிவுறுத்துகிறது.

நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை நாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகளைத் தவிர்க்கவேண்டிய அவசியம் இல்லை.

அந்த இடங்களில் கிருமிநாசினியைக் கொண்டு சுத்திகரிக்கும் பணிகளில் தேசியச் சுற்றுப்புற அமைப்பு உதவி வருகிறது என்று சுகாதார அமைச்சு கூறியது.


    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்