Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விமானங்களின் கதவுகள் ஏன் இடது பக்கத்தில் மட்டும் உள்ளன?

மற்ற வாகனங்களைப் போல் அல்லாது விமானங்களில் கதவுகள் இடது பக்கத்தில் மட்டும் உள்ளன. எந்த ஊருக்குச் சென்றாலும், எந்த விமான நிறுவனமானாலும் வர்த்தக விமானங்களின் கதவுகள் அனைத்தும் இடது பக்கத்தில் மட்டுமே உள்ளன.

வாசிப்புநேரம் -

கதவுகள் இடது பக்கத்தில் இருப்பதால், பயணப் பெட்டிகளை ஏற்றுவது, விமானத்தில் எரிப்பொருள் நிரப்புவது போன்ற எல்லா நடவடிக்கைகளும் வலது பக்கத்தில் இடையூறு இல்லாமல் நடக்க உதவுகிறதாக Readers Digest சஞ்சிகை குறிப்பிட்டது.

அது மட்டுமின்றி விமானிகள் பெரும்பாலும் இடது பக்கத்தில் அமர்வர். அதனால் கதவுகள் இடதுப் பக்கமாக இருக்கும் போது விமானிகள் இறக்கைக்கும் விமான நிலையத்தில் நுழைவாயிலுக்கும் உள்ள இடைவெளியைக் கணிக்க அது உதவுவதாக Quora பக்கத்தில் அமெரிக்க ஆகாயப் படை வீரர் ஒருவர் பதிலளித்தார்.

விமானத்தை இயக்குவது கப்பல்களை இயக்கும் பாணியைத் தழுவியுள்ளதால் கதவுகள் இடது பக்கத்தில் மட்டும் உள்ளதாகச் சிலர் யூகித்துள்ளார்.

இரண்டு பேரை மட்டும் ஏற்றிச் செல்லும் சில விமானங்களில் மட்டுமே இரு பக்கங்களிலும் கதவுகள் உள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்