Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிளாஸ்டிக் போத்தல்களைக் கொண்டு உணவங்காடியில் கட்டணம் செலுத்தலாம்...எப்போது?

தியோங் பாரு சந்தையின் உணவங்காடி நிலையத்தில் பிளாஸ்டிக் போத்தல்களைக் கொண்டு கட்டணம் செலுத்தும் முயற்சி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

வாசிப்புநேரம் -
பிளாஸ்டிக் போத்தல்களைக் கொண்டு உணவங்காடியில் கட்டணம் செலுத்தலாம்...எப்போது?

(படம்: Facebook/WWF Singapore)

தியோங் பாரு சந்தையின் உணவங்காடி நிலையத்தில் பிளாஸ்டிக் போத்தல்களைக் கொண்டு கட்டணம் செலுத்தும் முயற்சி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

உலக வனவிலங்கு அமைப்பு (WWF) ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கொடுக்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் போத்தலுக்கும் 50 காசு மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகளுக்குக் கூடுதலாக 1 வெள்ளி மதிப்புள்ள கூப்பன் கிடைக்கும்.

கூப்பன்களைப் பயன்படுத்தி உணவங்காடி நிலையத்தில் உணவுகளை வாங்கிக்கொள்ளலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக 5 வெள்ளி மதிக்கத்தக்க கூப்பன்கள் வழங்கப்படும். நிகழ்ச்சி செப்டம்பர் 15ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஒரு மணிநேரத்துக்கு 1,000 கூப்பன்களைக் கொடுக்கவுள்ளதாக அமைப்பு அதன் Facebook பக்கத்தில் குறிப்பிட்டது.

பிளாஸ்டிக் போத்தல்களையும் உணவுப் பெட்டிகளையும் கொடுக்கும் முன்னர் அவற்றைக் கழுவவேண்டும். கொடுக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் மறுபயனீடு செய்யப்படும் என்று அமைப்பு கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்