Images
  • morrison
    (படம்:Ministry of Communications and Information/Handout via REUTERS)

ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மீண்டும் கல்வியைத் தொடர, சிங்கப்பூர் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்


ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மீண்டும் கல்வியைத் தொடர, சிங்கப்பூர் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.

இருநாடுகளுக்கும் இடையிலான விமானப் பயணங்கள், பாதுகாப்பான முறையில் மீண்டும் தொடங்கும்போது அது சாத்தியமாகக்கூடும்.

இன்று நடைபெற்ற 6ஆவது தலைவர்கள் சந்திப்பில், பிரதமர் லீ சியென் லூங்கும், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனும் அதுபற்றிக் கலந்துரையாடினர்.

இருவழிப் பயணங்கள் தொடங்கும் முன், இருநாட்டு அங்கீகாரம் பெற்ற சுகாதார, தடுப்பூசிச் சான்றுகள் உள்ளிட்ட கட்டமைப்பையும், நடைமுறைகளையும் தயார்ப்படுத்தவேண்டும் எனப் பிரதமர் லீ கூறினார்.

ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் சிங்கப்பூர் மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர முதலில் வாய்ப்பளிக்கத் திட்டமுள்ளதாய்த் திரு. மோரிசன் தெரிவித்தார்.

தற்காப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கலாசாரப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் ஒப்பந்தங்களும் சந்திப்பின்போது கையெழுத்தாகின.

நிதித்துறைத் தொழில்நுட்பம், வெப்பவாயு வெளியேற்றத்தைக் குறைப்பது போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றியும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

Top