Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதமர் லீ

பிரதமர் லீ சியென் லூங் சுவிட்சர்லந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெறவிருக்கும் உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

பிரதமர் லீ சியென் லூங் சுவிட்சர்லந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெறவிருக்கும் உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

பிரதமருடன் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், தொடர்பு-தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆகியோரும் செல்வதாகப் பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது.

நாளை முதல் இம்மாதம் 25ஆம் தேதி வரை பிரதமர் லீ சுவிட்சர்லந்திலிருப்பதால், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.

புதிய பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தின் தலைமைத்துவம் குறித்த அங்கத்துக்கான பேராளர் குழுவில் அவர் இடம்பெறுவார். அந்த அங்கம் நேரடியாக ஊடகங்களில் ஒளிபரப்பப்படும்.

சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங்குடன் ஒரு கலந்துரையாடல் என்ற அங்கத்திலும் அவர் பங்கேற்பார்.

50ஆம் ஆண்டாக நடைபெறும் டாவோஸ் கருத்தரங்கு, அரசாங்கங்கள், தொழில் நிறுவனங்கள், சமூகத் தலைவர்கள் ஆகிய தரப்புகள் கருத்துப் பரிமாறிக்கொள்ளவும், உலகளாவிய சவால்களை அணுகும் முறைபற்றிக் கலந்துபேசவும் தளமாக விளங்குகிறது.

இவ்வாண்டின் கருப்பொருள் "ஒன்றிணைந்த-நீடித்த உலகின் பங்காளிகள்" என்பதாகும்.

700க்கும் அதிகமானோர் அதில் உரையாற்றுவர்.

பருவநிலை மாற்றம் முதல் அனைவரையும் உள்ளடக்கிய நடைமுறை வரை பல்வேறு தலைப்புகளில் அந்த உரைகள் அமையும்.

பிரதமர் லீயுடன், வெளியுறவு அமைச்சு, தொடர்பு-தகவல் அமைச்சு, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் டாவோஸ் செல்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்