Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மக்கள் செயல் கட்சி நாடாளுமன்றத்தின் 93 இடங்களையும் நிரப்புவது நடைமுறைக்கு அப்பாற்பட்டது: பிரதமர் லீ

மக்கள் செயல் கட்சி நாடாளுமன்றத்தின் 93 இடங்களையும் நிரப்புவதற்கான சாத்தியமுள்ளதா என்று  எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதமர் லீ பதிலளித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மக்கள் செயல் கட்சி நாடாளுமன்றத்தின் 93 இடங்களையும் நிரப்புவது நடைமுறைக்கு அப்பாற்பட்டது: பிரதமர் லீ

(படம்: People's Action Party)

மக்கள் செயல் கட்சி நாடாளுமன்றத்தின் 93 இடங்களையும் நிரப்புவதற்கான சாத்தியமுள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதமர் லீ பதிலளித்துள்ளார்.

அது நடைமுறைக்கு அப்பாற்பட்டதாக அமையக்கூடும் என்றார் அவர்.

சிங்கப்பூரர்கள் வலுவான அரசாங்கத்தை விரும்பும் அதேவேளையில் COVID-19 நிலவரத்தால் பலர் வேலை, வருமானம் ஆகியவற்றை இழந்திருப்பதையும் அவர் சுட்டினார்.

பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தங்களால் உணர முடிவதாகப் பிரதமர் கூறினார்.

அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான நிலையில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் தேர்தலை அறிவித்திருப்பதாக அவர் சொன்னார்.

இந்தத் தேர்தலில் எதிர்த்தரப்பினர் முற்றாகக் காணாமல்போகக்கூடும் என்று பாட்டாளிக்கட்சி கூறிவருவது குறித்துக் கருத்துரைத்த திரு லீ, அது சாமர்த்தியமான வாதம் என்றார்.

கடந்த தேர்தலில் பாட்டாளிக் கட்சி, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடன் செயல்பட்டது; அப்போது எதிர்க்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வாக்காளர்கள் தயாராய் இல்லை.

இந்த முறை எதிர்க்கட்சிகள் மாற்று உத்தியைக் கையாள்வதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகத் திரு லீ கூறினார்.

சிங்கப்பூரில் ஒரு குறிப்பிட்ட சமநிலை இருக்கிறது. அந்தச் சமநிலை இந்தத் தேர்தலில் முற்றாக மாறிவிடாது என்றார் பிரதமர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்