Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'அரசாங்கத்துக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையே முக்கியப் பாலமாகத் திகழும் சமூக மேம்பாட்டு மன்றங்கள்'

சமூக மேம்பாட்டு மன்றங்கள், குடியிருப்பாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே முக்கியப் பாலமாகத் திகழ்வதாய்ப் பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
'அரசாங்கத்துக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையே முக்கியப் பாலமாகத் திகழும் சமூக மேம்பாட்டு மன்றங்கள்'

(கோப்புப்படம்: Xabryna Kek/ CNA)

சமூக மேம்பாட்டு மன்றங்கள், குடியிருப்பாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே முக்கியப் பாலமாகத் திகழ்வதாய்ப் பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

மத்திய சிங்கப்பூர் வட்டாரச் சமூக மேம்பாட்டு மன்றத்தின் பத்தாவது பதவியேற்புச் சடங்கைப் பார்வையிட்டு, அவர் அவ்வாறு சொன்னார்.

குடியிருப்பாளர்களுக்கு இருக்கும் குறைநிறைகளை அடையாளம் காண சமூக மேம்பாட்டு மன்றங்கள் உதவுகின்றன என்றார் அவர்.

இடைவெளிகளைக் குறைத்து, தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரசாங்கத்துடன் இணைந்து திட்டங்களைச் செயல்படுத்தும் அமைப்புகளாகவும் அவை செயல்படுவதாகப் பிரதமர் கூறினார்.

மத்திய சிங்கப்பூர் வட்டாரச் சமூக மேம்பாட்டு மன்றத்தின் பத்தாவது பதவியேற்புச் சடங்கு இணையம் வழி இன்று நடைபெற்றது.

62 மன்ற உறுப்பினர்கள் நியமனம் பெற்றனர்.

ஜாலான் புசார் (Jalan Besar) குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா (Denise Phua), கடந்த செப்டெம்பர் மாதம், மத்திய சிங்கப்பூர் வட்டாரச் சமூக மேம்பாட்டு மன்ற மேயராக மூன்றாவது தவணைக் காலத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்