Images
  • pmlee
    (படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

வாக்காளர்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற மக்கள் செயல் கட்சி உறுதி : பிரதமர் லீ

சிங்கப்பூரின் அடுத்த பிரதமர்...

சிங்கப்பூரின் அடுத்தப் பிரதமராவதற்குத் தகுதியுள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதைத் தாம் அறிந்திருப்பதாகப் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் உறுதியான நபரை நிச்சயம் அடையாளங்காண முடியும் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

சிறந்த தேர்வு குறித்து குழு ஒருமனதாக முடிவெடுப்பதே அடுத்த கட்டம் என்றும் திரு லீ கூறினார்.

அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியை விட நான்காம் தலைமுறை அமைச்சர்கள் ஒன்றாகப் பணியாற்றுவது மிக முக்கியமான ஒன்று என்றும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்த பிரதமர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். எனினும் அதற்கு நேரமெடுக்கும். இன்னமும் ஒருவரைத் தேர்வு செய்ய தாங்கள் தயாராக இல்லை

என நம்புவதாகத் திரு லீ கூறினார்

குதிரைப் பந்தயம் போன்று இதனைக் கருதக்கூடாது.
இது ஒரு குழு விளையாட்டு.

வலுவான, ஒற்றுமையான குழு இருந்தால்தான் சிங்கப்பூர் வெற்றியடைய முடியும் என்று திரு லீ கூறினார்.

அடுத்த தலைமுறைத் தலைவர்கள்...

அடுத்த தலைமுறைத் தலைவர்கள், சிங்கப்பூரின் 50 ஆண்டுகால அனுபவத்தை வலுப்படுத்த முடியும்; அனைத்து சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்; சிங்கப்பூரை மேலும் வலுப்படுத்தவும் ஒற்றைமையை அதிகரிக்கவும் முடியும் எனத் திரு லீ நம்பிக்கை தெரிவித்தார். 

வெளிப்படையாக இருக்க வேண்டும்; அறிவாலும் மனத்தாலும் முடிவுகளை எடுக்க வேண்டும். 

வரலாற்றை நினைவில் கொள்ள வேண்டும், ஆனால் அதில் சிக்கிக்கொள்ளக்கூடாது எனத் திரு லீ சில ஆலோசனைகளையும் சொன்னார்.

எதிர்க்கட்சிகளும் போட்டித்தன்மையும்...

எதிர்க்கட்சிகள் குறித்தும் சிங்கப்பூரில் போட்டித்தன்மை நிலவுவது பற்றியும் திரு லீ பேசினார்.

வாக்காளர்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற மக்கள் செயல் கட்சி உறுதியாக இருக்கும் வரை எதிர்கட்சிகளின் கை மேலோங்காது. 

எனினும் மக்கள் செயல் கட்சி வழிநடத்தும் அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தால் எதிர்த்தரப்பு வளரும் என்று அவர் கூறினார்.

மக்கள் செயல் கட்சி செயல்படுவதற்குத் திடமாகவுள்ளது. சிக்கலான பிரச்சினைகளை அரசாங்கம் புறக்கணிக்காது.

ஒவ்வொரு தேர்தலையும் அது கடுமையான போட்டியாகப் பார்க்கிறது என்றும் திரு லீ வலியுறுத்தினார்.


 

Top