Images
  • historic meet
    படம்:  REUTERS/Jonathan Ernst

வெற்றிகரமான உச்சநிலைச் சந்திப்பு: டிரம்ப், கிம் இருவருக்கும் பிரதமர் லீ பாராட்டு

சிங்கப்பூரில் வெற்றிகரமான உச்சநிலைச் சந்திப்பு நடத்திய அதிபர் டிரம்ப்பையும் திரு. கிம் ஜோங் உன்னையும் பாராட்டி பிரதமர் லீ சியென் லூங் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.


அவர்களின் கூட்டறிக்கை, கொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதக் களைவைச் செயல்படுத்தி அங்கு நீடித்த அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கான நீண்ட பயணத்தின் முக்கியமான முதல் படி என்று பிரதமர் கூறினார்.

உச்சநிலைச் சந்திப்பு சிறப்பாக நடைபெற உழைத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.


Top