Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரால் வட்டார அளவில் விரைவாகவும் சமமாகவும் COVID-19 தடுப்பு மருந்தை விநியோகிக்க உதவமுடியும்: பிரதமர் லீ

சிங்கப்பூரால் வட்டார அளவில் விரைவாகவும் சமமாகவும் COVID-19 தடுப்பு மருந்தை விநியோகிப்பதில் உதவமுடியும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரால் வட்டார அளவில் விரைவாகவும் சமமாகவும் COVID-19 தடுப்பு மருந்தை விநியோகிக்க உதவமுடியும்: பிரதமர் லீ

படம்: MCI

சிங்கப்பூரால் வட்டார அளவில் விரைவாகவும் சமமாகவும் COVID-19 தடுப்பு மருந்தை விநியோகிப்பதில் உதவமுடியும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த 13ஆவது ஆசிய-ஐரோப்பிய உச்சநிலை மாநாட்டில் திரு லீ அதனைத் தெரிவித்தார்.

தளவாடச் சேவைகளை மேம்படுத்துவது, தடுப்பு மருந்து உற்பத்தியை விரிவுபடுத்துவது போன்றவற்றுக்கு சிங்கப்பூரால் உதவ முடியும் என்றார் பிரதமர் லீ.

சிங்கப்பூர் COVAX தடுப்பூசித் திட்டத்தின்கீழ் 122,000க்கு மேற்பட்ட முறை போடத்தேவையான தடுப்பு மருந்துகளை அண்டை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதைத் திரு லீ சுட்டினார்.

ஆசியானுக்கான COVID-19 மீட்சி நிதியில் சிங்கப்பூருக்கு வந்த வளங்களை மற்ற ஆசியான் நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கி உதவியதையும் அவர் குறிப்பிட்டார்.

உலக நாடுகள் COVID-19 கிருமியுடன் பாதுகாப்பாகவும் நீடித்த நிலைத்தன்மையுடனும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் லீ தெரிவித்தார்.

-CNA/gy 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்