Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமைச்சர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான இருதரப்பு நம்பிக்கை மாறக்கூடாது: பிரதமர் லீ

அமைச்சர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான இருதரப்பு நம்பிக்கை மாறக்கூடாது எனப் பிரதமர் லீ சியென் லூங் வலியுறுத்தியுள்ளார்.  

வாசிப்புநேரம் -

அமைச்சர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான இருதரப்பு நம்பிக்கை மாறக்கூடாது எனப் பிரதமர் லீ சியென் லூங் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த சில ஆண்டுகளில், சிங்கப்பூரின் அரசியல் தலைமைத்துவ மாற்றம் நிகழும் சூழலிலும் முக்கியமான அந்த அடிப்படை மாறக்கூடாது என்றார் அவர்.

அரசாங்கச் சேவை தொடர்ந்து நடுநிலையோடு செயல்படுவது அவசியம் என்றபோதும் அது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தோடு இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும் என திரு. லீ கூறினார்.

வருடாந்தரப் பொதுச் சேவைத் தலைமைத்துவ விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

நான்காம் தலைமுறைத் தலைவர்கள் மாறுபட்ட முறையில் பணிபுரிவர் என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

அவர்கள், சிங்கப்பூரர்களோடு இணைந்து கொள்கைகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவர்.

அரசாங்கச் சேவைத் துறைத் தலைவர்கள், அனுபவம், இயல்பு, மனப்போக்கு போன்றவற்றில் பலதரப்பட்டவர்களாக இருக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் திரு. லீ பேசினார்.

அரசாங்கச் சேவைகளில் எல்லாத் தரப்பினரும் சேரும்வகையில் அதன் ஆள்சேர்ப்பு முறை நெகிழ்ந்து கொடுக்கும் வகையில் இருக்கவேண்டும்.

தலைவர்கள் அதற்கு ஆவன செய்யவேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்