Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் முதன்மைச் சுகாதாரப் பராமரிப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும்: பிரதமர் லீ

சிங்கப்பூர்ச் சுகாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாகத் திகழும் முதன்மைப் பராமரிப்பைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்ச் சுகாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாகத் திகழும் முதன்மைப் பராமரிப்பைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

குடும்ப மருத்துவச் சங்கத்தின் 50ஆம் ஆண்டு நிறைவில் கலந்துகொண்டபோது திரு. லீ அவ்வாறு சொன்னார்.

குடும்ப மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முதன்மைப் பராமரிப்புகளுக்காக, நோயாளிகளுக்குக் குறிப்பிட்ட சில மருத்துவர்களை நியமிக்கும் முன்னோடித் திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றிப் பரிசீலிக்கப்படுவதாகவும் திரு. லீ சொன்னார்.

தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் பலதுறை மருந்தகங்களில் அந்த முன்னோடித் திட்டம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டது.

நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் திட்டம் மேம்படுத்துவதாகக் குழுமம் தெரிவித்தது.

திட்டத்தில் பங்கேற்ற நோயாளிகளில் அதிகமானோர், சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் முதலிய அம்சங்களை நன்கு கட்டுக்குள் வைத்திருந்ததும் தெரியவந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்