Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"பூமியை மீட்டெடுப்போம்" - 'ஒவ்வொரு முயற்சியும், பயனளிக்கும்' - பிரதமர் லீ

இன்று பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

இன்று பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு பூமி தினத்தின் கருப்பொருளான பூமியை மீட்டெடுப்பது, அனைவரும் இன்னும் நிறையச் செய்ய ஊக்குவிப்பதாகப் பிரதமர் லீ சியென் லூங் தமது Instagram பக்கத்தில் கூறியுள்ளார்.

அதில் தனிநபர்களாகப் பங்களிக்கப் பல வழிகள் உள்ளன. குறைவான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவது முதல் தண்ணீரைச் சேமிப்பது வரை.

ஒவ்வொரு முயற்சியும், பயனளிக்கும்.

தொடங்குவதற்கு ஒருபோதும் தாமதமாகவில்லை.

என்று திரு. லீ குறிப்பிட்டார்.

அனைத்துலக அளவில், பருவநிலைத் தீர்வுக்குச் சிங்கப்பூர் மும்முரமாகப் பங்களித்து வருவதாக அவர் கூறினார்.

இன்று நடைபெறவுள்ள பருவநிலை உச்சநிலை மாநாட்டில் சிங்கப்பூரின் பசுமை இலக்குகளைப் பற்றி அவர் பேச இருக்கிறார்.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பூமியை நமக்காகவும், அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்காகவும் உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் எனத் திரு. லீ தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்