Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் அதன் பொருளியல் மேம்பாட்டையும் நவீனத் தொழில்நுட்பங்களையும் முன்னெடுத்துச் செல்லும் : பிரதமர் லீ

நாட்டின் பொருளியல் மேம்பட்ட நிலையை எட்டியதால், வளர்ச்சி முன்னுரைப்பு 2 முதல் 4 விழுக்காடாக மிதமடைந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் அதன் பொருளியல் மேம்பாட்டையும் நவீனத் தொழில்நுட்பங்களையும் முன்னெடுத்துச் செல்லும் : பிரதமர் லீ

(படம்:AFP/Roslan Rahman)

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி, மறுமேம்பாடு ஆகியவற்றுக்குப் பல சாத்தியங்கள் இருப்பதாகப் பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

பொருளியல் வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என்றார் அவர். பொருளியல் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இடையே வாய்ப்புகளைக் காண முடிவதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

அதிபர் உரை மீதான விவாதத்தில் திரு. லீ கலந்துகொண்டு பேசினார்.

மின்னிலக்கப் பொருளியலை அவர் உதாரணமாகச் சுட்டினார். வியட்நாம், தாய்லந்து, மலேசியா போன்ற அண்டை நாடுகளின் தொழில்நுட்பத் துறைகள் மேம்பாடு காண்பதைத் திரு. லீ குறிப்பிட்டார்.

இந்தோனேசியாவில், குறைந்தது ஒரு பில்லியன் டாலர் மதிப்புகொண்ட 4 நிறுவனங்கள் அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

அத்தகைய நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வேளையில், சிங்கப்பூரின் தொழில்நுட்பத் துறையையும் நாம் மேம்படுத்தினால் இருதரப்பும் கூட்டாகப் பலனடையலாம் என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவு, நிதித் தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தி போன்ற துறைகளில் சிங்கப்பூர் நல்ல வளர்ச்சி கண்டுவருவதாகப் பிரதமர் சொன்னார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவுத் துறையில் நல்ல பெயரைப் பெற்றுள்ளது.

அலிபாபா நிறுவனத்துடன் இணைந்து அதற்கான ஆய்வுநிலையத்தையும் அமைத்துள்ளது என்று திரு. லீ கூறினார்.

கடந்த சில ஆண்டில், சிங்கப்பூர் நாணய வாரியம், சிங்கப்பூரை நிதித் தொழில்நுட்ப நடுவமாக உருவாக்கியிருக்கிறது. 400க்கும் அதிகமான நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கே செயல்பட்டுவருகின்றன; பன்னாட்டு நிறுவனங்கள் 30க்கும் அதிகமான புத்தாக்க ஆய்வு நிலையங்களை சிங்கப்பூரில் நிறுவியுள்ளன என்றார் அவர்.

கடந்த 50ஆண்டாக சீரான வளர்ச்சி அடைந்துள்ளதால், சிங்கப்பூரின் நிலை தற்போது வலுவாக இருப்பதாகப் பிரதமர் லீ கூறினார்.

1965க்குப் பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தி 40 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்ததாக அவர் கூறினார்.

நாட்டின் பொருளியல் மேம்பட்ட நிலையை எட்டியதால், வளர்ச்சி முன்னுரைப்பு 2 முதல் 4 விழுக்காடாக மிதமடைந்துள்ளது.

அதுகுறித்துச் சிங்கப்பூரர்கள் கவலையடையத் தேவையில்லை. முதிர்ச்சியடைந்த பொருளியலுக்கு அது நல்ல வளர்ச்சி விகிதம் என்றார் திரு. லீ.

அது நமது வளர்ச்சிக்கோ, கனவுகளுக்கோ எல்லை அல்ல என்றார் பிரதமர் லீ.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்