Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரின் பொருளியலில் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கும்: பிரதமர் லீ

COVID-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரின் பொருளியலில் அடுத்த சில காலாண்டுகளுக்குக் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

COVID-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரின் பொருளியலில் அடுத்த சில காலாண்டுகளுக்குக் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள கிருமிப்பரவல் மிகவும் கடுமையானதாக உள்ளது என்று அவர் கூறினார்.

17 ஆண்டுகளுக்கு முன்னர் SARS கிருமித்தொற்றின்போது இந்த வட்டாரப் பொருளியல்கள் சீனாவுடன் வைத்திருந்த தொடர்பைவிட தற்போது அதிகப் பிணைப்பைக் கொண்டுள்ளன என்று பிரதமர் லீ கூறினார்.

சிங்கப்பூர், பொருளியல் மந்தநிலையை எதிர்நோக்குமா என்பதைத் தம்மால் சொல்ல இயலாது என்று குறிப்பிட்ட திரு லீ, அதற்கான சாத்தியம் இருக்கிறது என்றார்.

SARS காலத்தின்போது, சிங்கப்பூரில் கிருமிப்பரவல் இல்லை என்று நான்கு மாதங்களில் அறிவிக்கப்பட்டது; ஆனால் COVID-19 கிருமித்தொற்று இல்லை என்று அவ்வளவு விரைவில் அறிவிக்க முடியாமல் போகலாம் என்று பிரதமர் கூறினார்.

வழக்கநிலை நிச்சயம் திரும்பும். அதற்கு எவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும் என்பதைத் தம்மால் உறுதியாகச் சொல்லமுடியாது என்றார் அவர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்