Images
  • pm lee (1)
    கோப்புப் படம்: MCI

பிரதமர் லீயின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்

பிரதமர் லீ சியென் லூங் முஸ்லிம்கள் அனைவருக்கும் தமது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

நோன்புப் பெருநாள், ரமதான் மாதம் இரண்டும் இந்த ஆண்டு மாறுபட்ட வகையில் கொண்டாடப்பட்டதைப் போலவே ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்களும் இம்முறை வேறுபடுவதாக அவர் சொன்னார்.


முஸ்லிம்கள் சிலர், ஹஜ்ஜுப் பயணங்களை ஒத்திவைக்க நேர்ந்ததையும் குர்பான் சடங்கு பள்ளிவாசல்களுக்குப் பதிலாக வெளிநாடுகளில் நடத்தப்படுவதையும் திரு. லீ தமது Facebook பதிவில் குறிப்பிட்டார். ஆயினும் பெருநாளின் உணர்வு தொடர்வதையும் சில பள்ளிவாசல்கள் சிறப்புத் தொழுகை நடத்துவதையும் அவர் சுட்டினார்.

நோய்ப்பரவல் காலம் ஒரு நாள் முடிந்துவிடும்; அது வரை நாம் அனைவரும் விழிப்புடனும் சமூகப் பொறுப்புடனும் இருப்பதோடு பாதுகாப்பு நடைமுறைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் பிரதமர் லீ.

 

Top