Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ கலந்துகொள்ளவிருக்கிறார்

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ கலந்துகொள்ளவிருக்கிறார்

வாசிப்புநேரம் -

பிரதமர் லீ சியென் லூங் 38, 39ஆவது ஆசியான் உச்சநிலைச் சந்திப்புகளில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

நாளை முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை நடக்கும் அந்தச் சந்திப்புகளில் பிரதமர் லீ காணொளி வாயிலாகக் கலந்துகொள்வார் என்று பிரதமர் அலுவலகம் கூறியது.

சிங்கப்பூர்ப் பேராளர் குழுவைத் திரு லீ வழிநடத்துவார்.

ஆசியான் தலைவர்கள் எப்படி ஒன்றுபட்டு மற்ற தரப்புகளுடனும் உலகச் சமூகங்களுடனும் செயல்படுவது என்பதைப் பற்றிக் கலந்துபேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

COVID-19-இலிருந்து மீண்டுவருதல், எதிர்கால நெருக்கடிகளுக்குத் தயாராதல் போன்றவையும் சந்திப்பில் ஆராயப்படும்.

ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள புரூணை "We Care, We Prepare, We Prosper" என்ற கருப்பொருளின்கீழ் சந்திப்பை நடத்துகிறது.

24ஆவது ஆசியான்+3 உச்சநிலைச் சந்திப்பும் 16ஆவது கிழக்காசிய உச்சநிலைச் சந்திப்பும் நடைபெறவிருக்கின்றன.

அதில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான்,
தென்கொரியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்