Images
  • PM LEE
    கோப்புப்படம்: Gaya Chandramohan

அனைத்துலகச் சமூகம் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் அதே நேரம் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்: பிரதமர் லீ

அனைத்துலகச் சமூகம் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் அதேவேளையில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் கவனமாக இருக்கவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

G20 இணைய மாநாட்டில் அவர் அதனைத் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளாய் அனைத்துலகப் பாதுகாப்பு உதவிப் படை, பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து ஆப்கானிஸ்தானைப் பாதுகாத்து வந்ததாகப் பிரதமர் லீ சொன்னார்.

இருப்பினும் அச்சுறுத்தல் தொடர்கிறது.

ஆப்கானிஸ்தான், அனைத்துலகச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி நாட்டின் மறுநிர்மாணத்திற்கும் வட்டார அமைதிக்கும் வழிவிடும் நிலை உருவாகும் என்று பிரதமர் லீ நம்பிக்கை தெரிவித்தார். 

Top