Images
  • pm lee (1)

ஜப்பானுடன் தடுப்புமருந்து தயாரிப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூர் ஆவலுடன் உள்ளது: பிரதமர் லீ

சிங்கப்பூர் ஜப்பானுடன், தடுப்புமருந்து தயாரிப்பு, மின்னிலக்க வர்த்தகம் போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஆவலுடன் இருப்பதாகப் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட திரு யோஷிஹிடே சுகாவுக்கு (Yoshihide Suga) வாழ்த்து கூற, அவருடன் தொலைபேசியில் உரையாற்றியபோது பிரதமர் லீ அவ்வாறு கூறினார்.

கொரோனா கிருமிப்பரவலைக் கையாள்வது பற்றியும் இரு நாட்டுப் பிரதமர்களும் கருத்து பரிமாறிக்கொண்டனர்.

இந்நிலையில், இவ்வாண்டு இறுதிக்குள் விரிவான வட்டாரப் பொருளில் பங்காளித்துவ உடன்படிக்கை செய்துகொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகப் பிரதமர் லீ சொன்னார்.

ஆசிய பசிபிக் வட்டாரத்தின் 15 நாடுகளை அந்த ஒப்பந்தம் உள்ளடக்கும்.

உலக வர்த்தகத்தில் 30 விழுக்காட்டுக்கும் மேல் அதன்கீழ் இடம்பெறும்.

Top