Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உள்துறை அமைச்சின் புதிய அறிவியல், தொழில்நுட்ப அமைப்பைத் தொடங்கிவைத்தார் பிரதமர் லீ

உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவுக்கான அறிவியல், தொழில்நுட்ப அமைப்பைப் பிரதமர் லீ சியென் லூங் தொடங்கிவைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -

உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவுக்கான அறிவியல், தொழில்நுட்ப அமைப்பைப் பிரதமர் லீ சியென் லூங் தொடங்கிவைத்துள்ளார்.

HTX அமைப்பு, உள்நாட்டுப் பாதுகாப்புக்கான முன்னணி அறிவியல், தொழில்நுட்ப அமைப்பாக உருவெடுக்கும் என்றும், சிங்கப்பூரின் ஆற்றலுக்கு வலுசேர்க்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேம்பட்ட தடயவியல் சோதனை, உயிர்காக்கும் இயந்திர நாய், சட்டவிரோத ஆளில்லா வானூர்திகளைக் கண்காணிக்கும் புதிய ஆளில்லா வானூர்தி போன்றவை அமைப்பு உருவாக்கிவரும் சில தொழில்நுட்பங்கள்.

உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல புதிய அமைப்பு உதவும் என்று திரு. லீ தமது உரையில் குறிப்பிட்டார்.

அதனைச் சாத்தியமாக்க அமைப்பு 2 முக்கிய சவால்களை எதிர்கொண்டது.

தலைசிறந்த பொறியியல் திறனாளர்களை ஈர்ப்பது, நடைமுறைக்கு உகந்த தீர்வுகளைக் காண்பது ஆகியவை அந்தச் சவால்கள்.

தற்போது அமைப்பில் 1,300 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.

அந்த எண்ணிக்கையை ஈராயிரத்துக்கு உயர்த்தும் திட்டமிருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

அரசாங்க அமைப்புகள் அனைத்தும் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்கின்றன.

வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தவும், கூடுதல் திறன்மிக்க அதிகாரிகளைப் பணியில் அமர்த்தவும் அவை முயல்வதாகத் திரு. லீ கூறினார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்