Images
  • PM Lee leadership (1)
    (படம்: Jalelah Abu Baker)

அடுத்த தலைமுறைத் தலைவர்களிடம் தலைமைத்துவப் பொறுப்புகள் சுமுகமான முறையில் ஒப்படைக்கப்படும்: பிரதமர் லீ

பிரதமர் லீ சியென் லூங், அடுத்த தலைமுறைத் தலைவர்களிடம் தலைமைத்துவப் பொறுப்புகள் சுமுகமான முறையில் ஒப்படைக்கப்படுவதைத் தமது குழு உறுதிசெய்யும் எனக் கூறியுள்ளார்.

ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் தோங்கின் சுயசரிதை வெளியீட்டில் உரையாற்றியபோது அவர் அதனைத் தெரிவித்தார்.

பிரதமர் பதவிக்கு உயர்ந்த திரு. கோவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் புத்தகம் அது.

சுயமான தலைமைத்துவப் புதுப்பிப்பை ஊக்குவிப்பதன் அவசியம் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறை அமைச்சர்கள் தலைவர்களாகப் பொறுப்பேற்கும் சரியான நேரத்தில் அத்தகைய அறிவுரை அவசியம் எனத் திரு. லீ வலியுறுத்தினார்.

மாற்றம் ஏற்படும் அதே நேரத்தில் தொடர்ச்சியை உறுதிசெய்வது முக்கியம் என்பதை அவர் சுட்டினார்.

சரியான தலைவரை அடையாளம் காண்பது மட்டும் போதாது.

நாட்டை வழிநடத்துவதற்கான வலுவான குழுவைத் தெரிவுசெய்வதும் அவசியம் என்றார் பிரதமர்.

இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு.

திரு கோவின் அரசியல் அனுபவம் உட்பட பல்வேறு வாழ்க்கைச் சாதனைகளையும் புத்தகம் எடுத்துரைத்துள்ளது.

இதுவரை சுமார் 12ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

மேலும் பலர் அதை வாங்குவார்கள் எனப் புத்தக வெளியீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புத்தகத்தின் இரண்டாம் பாகத்திற்கான தொடக்கப் பணிகளும் ஆரம்பித்துள்ளன.



Top