Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரதமர் லீ மலேசியப் பிரதமர் மகாதீரைச் சந்திக்கவிருக்கிறார்

பிரதமர் லீ சியென் லூங், மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதை, வரும் சனிக்கிழமை சந்திக்கவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பிரதமர் லீ மலேசியப் பிரதமர் மகாதீரைச் சந்திக்கவிருக்கிறார்

(படம்: Screengrab and Reuters)

பிரதமர் லீ சியென் லூங், மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதை, வரும் சனிக்கிழமை சந்திக்கவிருக்கிறார்.

டாக்டர் மகாதீரைத் தாம் மலேசியா சென்று சந்திக்கவிருப்பதாகத் திரு. லீ நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

மலேசியாவின் புதிய அரசாங்கத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும், அடுத்த சில நாட்களுக்கு டாக்டர் மகாதீர் முகமது பல அலுவல்களில் ஈடுபட்டிருப்பார் என்றும் அவர் கூறினார்.

எனினும் டாக்டர் மகாதீரைச் சென்று சந்திக்கத் தாம் திட்டமிட்டிருப்பதாகத் திரு. லீ தெரிவித்தார். 

இருதரப்பு நன்மைக்காக மீண்டும் அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக டாக்டர் மகாதீரிடம் தெரிவிக்கப் போவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். 

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்துள்ளதாகவும் அவர் சொன்னார். 

டாக்டர் மகாதீருடன் முன்பு ஒன்றாக வேலை செய்த அனுபவம் தமக்கு இருப்பதாகவும் திரு. லீ தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்