Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வரும் 7ஆம் தேதி முதல் அத்தியாவசியச் சேவைகளைத் தவிர, பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்படும் - பிரதமர் லீ

சிங்கப்பூரில் வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து, அத்தியாவசியச் சேவைகளைத் தவிர, பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்படும்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் வரும் 7ஆம் தேதி முதல் அத்தியாவசியச் சேவைகளைத் தவிர, பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்படும் - பிரதமர் லீ

கோப்புப் படம்

சிங்கப்பூரில் வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து, அத்தியாவசியச் சேவைகளைத் தவிர, பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்படும்.

பிரதமர் லீ சியென் லூங் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அதனைத் தெரிவித்தார்.

முதலாவதாகப் பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்படும்.

உணவுக் கடைகள், பேரங்காடிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், பொதுப் பயனீட்டுச் சேவைகள், போக்குவரத்து, முக்கிய வங்கிச் சேவைகள் ஆகிய அத்தியாவசியச் சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்றார் அவர்.

அனைத்துலக விநியோகத் தொடருக்குப் பங்களிக்கும் முக்கியப் பொருளியல் நிறுவனங்களும் தொடர்ந்து செயல்படும். அத்தகைய துறைகளில் செயல்படுவோர் தொடர்ந்து வேலைக்குச் சென்றாலும், பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது கட்டாயம் என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.

இதர வேலையிடங்களில், ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைபார்ப்பது சாத்தியம் என்றால் அவ்வாறே செய்யவேண்டும்.

ஆனால் கட்டுமானத் தளங்கள், கப்பல் பட்டறை போன்றவற்றில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்டோர் அவ்வாறு செய்ய இயலாது என்பதைப் பிரதமர் சுட்டினார்.

அவர்களின் தங்குமிடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் திரு. லீ.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்