Images
  • o level
    (படம்: கீர்த்திகா பெருமாள்)

GCE சாதாரண நிலைத் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து

GCE சாதாரண நிலைத் தேர்வு முடிவுகளை இன்று பெற்றுக்கொண்ட மாணவர்களுக்குப் பிரதமர் லீ சியென் லூங் இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் இருதரப்பினரின் பல ஆண்டு உழைப்புக்கு இன்று வெளியான முடிவுகள் ஒரு முத்தாய்ப்பு என்று தம் Instagram பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் அவர்.

கல்விப் பயணத்தின் அடுத்தக் கட்டத்தில் காலடி வைக்கும் முன்னர் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து தெரிவு செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.

மாணவர்கள் தங்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள், குடும்பத்தார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க மறக்கக்கூடாது என்றார் அவர்.

தொடர்ந்து நண்பர்களுடன் உறவை நீட்டிக்கவும் பிரதமர் அறிவுரை கூறினார்.

Top