Images
  • PM Lee on Cyber security (1)

வழிகாட்டி, தோழர், ஆலோசகர்"-ஓய்வு பெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ குறித்துப் பிரதமர் லீ

"வழிகாட்டி, தோழர், ஆலோசகர்"...

ஓய்வு பெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் தோங்கைப் பற்றிய பிரதமர் லீ சியென் லூங்கின் வருணனை வார்த்தைகள் இவை...

திரு. கோவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் "Tall Order: The Goh Chok Tong Story'' எனும் புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் பிரதமர் லீ கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

அரசியலில் தமக்கு திரு. கோ வழிகாட்டியாக இருந்ததைத் திரு.லீ நினைவுகூர்ந்தார்.

திரு. கோவின் குழந்தைப் பருவம் முதல் அவர் சிங்கப்பூரின் பிரதமாரகப் பதவி ஏற்ற காலம் வரையிலான நிகழ்வுகளைப் புத்தகத்தில் படிக்கலாம்.

புதிய தலைமுறைத் தலைவர்களைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் இப்புத்தகம் வெளிவந்துள்ளதைத் திரு. லீ பாராட்டினார்.


சிங்கப்பூரின் அடுத்த அத்தியாயத்தை எழுதும்போது பின்னோக்கிப் பார்ப்பது நன்று.

அந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன என்பதைத் தெரிந்து கொள்வதும் நன்று எனத் திரு. லீ தமது Instagram பதிவில் கூறியிருந்தார்.  

Top