Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுவான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டும் : பிரதமர் லீ

மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது கூடுதல் எதிர்த்தரப்பு உறுப்பினர்களும் எதிர்த்தரப்புத் தலைவரும் இருப்பதால் மன்றத்தில் மேலும் காரசாரமான விவாதங்களை எதிர்பார்க்க வேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுவான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டும் : பிரதமர் லீ

(கோப்புப் படம்: PAP)

மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது கூடுதல் எதிர்த்தரப்பு உறுப்பினர்களும் எதிர்த்தரப்புத் தலைவரும் இருப்பதால் மன்றத்தில் மேலும் காரசாரமான விவாதங்களை எதிர்பார்க்க வேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

எதிர்த்தரப்பினரின் யோசனைகளை ஆராய்ந்து அவர்களுடன் வலுவான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட அவர்கள் தயாராய் இருக்க வேண்டும் என்றார் அவர்.

இன்று மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய 8 பக்கக் கடிதத்தில் பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் பிரதமர், தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்புவது வழக்கம்.

விவேகத்துடன் நடந்து கொள்வது தொடர்பான விதிமுறைகள் அதில் குறிப்பிடப்படுகின்றன.

அரசாங்கக் கொள்கைகளுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் தங்களது வெளிப்படையான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அதே வேளையில், அவர்கள் எதிர்தரப்பினருடன் விவாதத்தில் ஈடுபடவும் அவர்களின் தலையீடுகள் குறித்து விளக்கம் கேட்கவும் அவர்களின் யோசனைகளை ஆராயவும் தயாராய் இருக்க வேண்டும் என்றார் அவர்.

தங்கள் பணிகள் பற்றிப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக ஊடகத்தை அவர்கள் பயன்படுத்தலாம் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எனினும் முறையான வகையில் அதனைச் செய்ய வேண்டும். தகவல்களைத் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மற்றவர்களைத் தாக்குவதோ, நீண்ட விவாதத்தில் ஈடுபடுவதோ கூடாது என்று பிரதமர் குறிப்பிட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்