Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இலங்கையில் நடத்தப்பட்ட கொடிய தாக்குதல்கள் திடுக்கிடச் செய்கின்றன : பிரதமர் லீ

பிரதமர் லீ சியென் லூங், ஈஸ்ட்டர் தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட கொடிய தாக்குதல்கள் திடுக்கிடச் செய்வதாகக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
இலங்கையில் நடத்தப்பட்ட கொடிய தாக்குதல்கள் திடுக்கிடச் செய்கின்றன : பிரதமர் லீ

(படம்: cna)

பிரதமர் லீ சியென் லூங், ஈஸ்ட்டர் தினத்தில் இலங்கையில்  நடத்தப்பட்ட கொடிய தாக்குதல்கள் திடுக்கிடச் செய்வதாகக் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டோருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் திரு. லீ தெரிவித்துக்கொண்டார்.

இலங்கையிலிருக்கும் சிங்கப்பூரர்கள் தூதரக உதவிக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் 24 மணிநேர அலுவலகத்தை நாடும்படி பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அதிபர் ஹலிமா யாக்கோப், இலங்கைத் தாக்குதல்களில் பலியானோர் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும், ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக்கொண்டார்.

துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், இலங்கைத் தாக்குதல்கள் மானுடத்துக்கு எதிரானவை என்று சாடியுள்ளார்.

சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, அப்பாவி மக்கள் பலியானது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

அத்தகைய பயங்கரவாதச் செயல்களைக் கண்டிப்பதில், இலங்கையுடன் சிங்கப்பூர் ஒன்றுபட்டிருப்பதாக அவர் கூறினார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்