Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் மீது நம்பிக்கை வைத்ததற்கு Panasonic நிறுவனத்திற்கு நன்றி: பிரதமர் லீ

சிங்கப்பூர் மீது நம்பிக்கை வைத்த Panasonic நிறுவனத்திற்குப், பிரதமர் லீ சியென் லூங் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் மீது நம்பிக்கை வைத்ததற்கு Panasonic நிறுவனத்திற்கு நன்றி: பிரதமர் லீ

படம்: Google Street View

சிங்கப்பூர் மீது நம்பிக்கை வைத்த Panasonic நிறுவனத்திற்குப், பிரதமர் லீ சியென் லூங் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

திரு லீ அந்த கருத்தைத் தமது Facebook பக்கத்தின் மூலம் பதிவு செய்தார்.

Panasonic நிறுவனம் சிங்கப்பூரில் குளிர்பதனத்தில் காற்றின் அழுத்தத்தை அதிகரிக்கும் Compressor எனும் பாகத்தின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக நேற்று அறிவித்தது.

அந்தச் செய்தி வருத்தமளித்ததாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிறுவனத்தின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும்.

அதனால் சிங்கப்பூரில் சுமார் 700 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர்.

Panasonic நிறுவனத்தின் குளிர்பதன Compressor உற்பத்தித் தொழிற்சாலை, 1972 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நிறுவப்பட்டது.

இதுவரை சுமார் 285 மில்லியனுக்கும் அதிகமான பாகங்களை நிறுவனம் உற்பத்தி செய்து, இங்கிருந்து உலகெங்கும் ஏற்றுமதி செய்துள்ளது.

நிறுவனம் 100 மில்லியன் பாகத்தை உற்பத்தி செய்துமுடித்ததைக் குறிக்கும் நிகழ்வில் தாம் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்தார் பிரதமர் லீ.

அப்போது உலகில் தயாரிக்கப்பட்ட குளிர்பதன Compressor பாகத்தில் மூன்றில் ஒரு பங்கு சிங்கப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதையும் திரு லீ குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தகுந்த ஆதரவை வழங்க, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸூம் துறை சார்ந்த அமைப்புகளும் உதவும் என்று அவர் கூறினார்.

- CNA/lk(gr) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்