Images
  • PM LEE (1)
    (படம்: People's Action Party)

இந்தப் பொதுத்தேர்தல் நாட்டின் பல முக்கிய விவகாரங்கள் பற்றியது - அதை அனைவரும் மனத்தில் கொள்ளவேண்டும்: பிரதமர் லீ


பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong), இந்தப் பொதுத்தேர்தல் நாட்டின் பல முக்கிய விவகாரங்கள் பற்றியது என்பதை அனைவரும் மனத்தில் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

மக்கள் செயல் கட்சி, தொகுதிகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு அணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று அவர் சுட்டினார்.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் நடந்த நேர்காணலில் திரு லீ அவ்வாறு கூறினார்.

2015இல் நடந்த பொதுத்தேர்தலில், மக்கள் செயல் கட்சி மொத்தம் 69.9 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி கண்டிருந்தது.

இம்முறை அதைவிடச் சிறப்பாகச் செய்வதற்கு இலக்கு ஏதும் உள்ளதா என்று பிரதமர் லீயிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், தேர்தலுக்கு எண்களை அடிப்படையாகக் கொண்ட இலக்குகளைத் தாம் வைத்திருப்பதில்லை என்று கூறினார்.

ஒவ்வொரு வாக்கைப் பெறவும் கடுமையாய் உழைக்கவிருப்பதாக அவர் சொன்னார்.

அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டி இருப்பது குறித்துத் தாம் மகிழ்ச்சி அடைவதாகத் திரு லீ சொன்னார்.

அந்தக் குழுத்தொகுதியில் போட்டியிடும் சீர்திருத்தக் கட்சியினரின் திட்டங்களை அறிய குடியிருப்பாளர்கள் ஆவலாய் இருப்பதாக அவர் கூறினார். 

சீர்திருத்தக் கட்சி, திரு கென்னத் ஜெயரத்னம் (Kenneth Jeyaratnam) தலைமையில் களம் இறங்குகிறது.

தற்போது அவர் பிரிட்டனிலிருந்து நாடு திரும்பியதால் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரின் சார்பில் பிரதிநிதி ஒருவர் வேட்புமனுவை இன்று காலையில் டெயி உயர்நிலைப்பள்ளியில் தாக்கல் செய்திருந்தார்.

Top