Images
  • PM Lee (2)
    படம்: CNA

தாய்லந்தில் 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்- பிரதமர் லீ இரங்கல்

பிரதமர் லீ சியென் லூங், தாய்லந்தில் ராணுவ ஊழியர் ஒருவர் 29 பேரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து அந்நாட்டுப் பிரதமர் பிராயுத் சான் ஓச்சாவிற்கு (Prayut Chan-o-cha) இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது.

அந்தச் சம்பவம் தமக்கு அதிர்ச்சியளித்ததாய்த் திரு. லீ அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நக்கோன் ராட்சசிமா நகரில் (Nakhon Ratchasima) இம்மாதம் 8ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல அப்பாவி மக்கள் பலியானதையும் பலர் காயமடைந்ததையும் அவர் சுட்டினார்.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பாக மாண்டோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைப் பிரதமர் தெரிவித்துக்கொண்டார். காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் அவர் வாழ்த்து கூறினார்.

Top