Images
  • Toc
    படம்: Today

பிரதமர் லீக்குச் சுமார் 88,000 வெள்ளி அளிக்கும்படி, The Online Citizen தலைமைச் செய்தியாசிரியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

The Online Citizen (TOC) இணையத்தளத்தின் தலைமைச் செய்தியாசிரியர் டெர்ரி சூ (Terry Xu), பிரதமர் லீ சியென் லூங் தொடுத்த அவதூறு வழக்கிற்கான செலவுக்காக 87,832.93 வெள்ளியை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

38 ஒக்ஸிலி (38 Oxley) ரோடு வீட்டின் தொடர்பில் பிரதமர் லீ சியென் லூங்கிற்கும் அவரின் உடன்பிறந்தவர்களுக்கும் இடையிலான கருத்துவேறுபாடுகள் குறித்து அந்த இணையத்தளத்திலும் Facebook பக்கத்திலும் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

அந்தக் கட்டுரையின் தொடர்பில் திரு லீ, அதை எழுதிய குமாரி ருபாஷினி ஷண்முகநாதன் மீதும் திரு சூ மீதும் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கில் திரு. லீக்கு இழப்பீடாக 210,000 வெள்ளி வழங்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திரு சூ, சமூக நன்கொடைகள் மூலம் 210,000 வெள்ளியைத் திரட்டியிருந்தார்.

இழப்பீட்டுத் தொகையைத் திரு லீ அறநிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவார் என்று அவரின் பத்திரிகைச் செயலாளர் தெரிவித்தார்.

- CNA  

Top