Images
  • PM Lee Widodo
    (படம்: TODAY/Najeer Yusof Muallim)

சிங்கப்பூர்-இந்தோனேசிய உறவு நம்பிக்கை, ஒத்துழைப்புடன் கூடிய உன்னத நிலையில் உள்ளது: பிரதமர் லீ

சிங்கப்பூருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவு ஆழமானதாகவும், பன்முகத்தன்மைமிக்க தொலைநோக்குடனும் அமைந்திருப்பதாகப் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருப்பதையொட்டி திரு. லீ அதனைத் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்புக்காகத் விடோடோ சிங்கப்பூர் வந்துள்ளார்.

அவருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பளிக்கப்பட்டது.

பிரதமர் லீ சியென் லூங்குடன் திரு. விடோடோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இரு நாட்டுக்கும் இடையே உன்னதமான, நம்பிக்கையுடன் கூடிய ஒத்துழைப்புத் தொடர்வதாகப் பிரதமர் கூறினார்.

திரு. விடோடோ முதல் தவணைக்கு அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்தே இரு தரப்பு உறவு மேலும் செழிப்படைந்துள்ளதாகத் திரு. லீ சொன்னார்.

இரு நாட்டு மக்களின் வளப்பத்துக்காகத் தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் திரு. விடோடோ கூறினார்.

அவர் இந்தோனேசிய அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து இரு தலைவர்களும் நான்காவது முறையாகச் சந்தித்துள்ளனர்.

முன்னதாக, பாதுகாப்பான வர்த்தகத்துக்கு உதவும் மின்னியல் தகவல் பரிமாற்றம், தேசிய ஆவணக் காப்பகம் ஆகியவற்றின் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இரு தரப்பு வர்த்தகத்தில் தடையற்ற, காகிதமற்ற, பாதுகாப்பான வர்த்தகச் சூழலை உருவாக்க அந்த உடன்பாடு உதவும்.

இந்தோனேசிய அதிபருக்கு பிரதமர் லீ அதிகாரபூர்வ இரவு விருந்தளித்துச் சிறப்பித்தார்.







 

Top