Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியப் பொதுத்தேர்தல்: திரு.மோடியின் வெற்றிக்குப் பிரதமர் லீ வாழ்த்து

இந்தியப் பொதுத்தேர்தலில் மீண்டும் பிரதமராகத் தேர்வு பெற்றதற்காக, திரு. நரேந்திர மோடிக்கு, சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்தியப் பொதுத்தேர்தல்: திரு.மோடியின் வெற்றிக்குப் பிரதமர் லீ வாழ்த்து

படம்: REUTERS/Edgar Su

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தியப் பொதுத்தேர்தலில் மீண்டும் பிரதமராகத் தேர்வு பெற்றதற்காக, திரு. நரேந்திர மோடிக்கு, சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் திரு. மோடியின் தலைமைத்துவத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கையை, வலுவான ஆதரவு காட்டுவதாகப் பிரதமர் லீ எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கப்பூர்-இந்தியா இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் திரு.மோடி காட்டிவரும் தனிப்பட்ட அக்கறையை சிங்கப்பூர் மதிப்பதாகத் திரு. லீ தெரிவித்தார்.

அந்தத் தொடர் ஆதரவு காரணமாக, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு கணிசமாக மேம்பட்டது. 

2015ஆம் ஆண்டு உத்திபூர்வ பங்காளித்துவ நிலையை எட்டிய இருதரப்பு உறவு காரணமாகத் தற்காப்பு, பண்பாடு ஆகிய அம்சங்களில் ஒத்துழைப்பு அதிகரித்தது.

வட்டார ஈடுபாட்டை இந்தியா அதிரித்து வருவதை சிங்கப்பூர் வரவேற்பதாகவும் பிரதமர் லீ குறிப்பிட்டார். 

இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில், இந்தியப் பிரதமருடன் மேலும் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்திருப்பதாக அவர் தமது கடிதத்தில் தெரிவித்தார்.

இயன்றபோது மீண்டும் சிங்கப்பூருக்கு வருகைதருமாறு, திரு. மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

திரு. மோடியின் உடல் ஆரோக்கியத்திற்கும், புதிய தவணைக் காலத்தில் வெற்றிக்கும் திரு. லீ வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்